காலவரை அறியாது
கவிஞனின் உள்ளத்தில்
கருவறை வாசம்
காணும் கவிப் பொருளும்
கவிஞன் ஈன்றெடுத்த மகவே..
கவிதையும் குழந்தையும்
கருவில் சூல் கொண்டு
கற்பனையில்
உருக்கொண்டு
கருவறையினைக் கிழித்தே
உருவெடுக்கும்..
கவியும் குழவியும்
கால மாற்றத்தில்
வளரும், ஒளிரும்,
உரு மாறும்..
எனினும்,
பிறந்த சிசு
கருவறைக்குள்
உட் புகா..
பின்
எழுதிய கவிதை மட்டும்
கவியின் கருவறையில்
மீண்டும் உட்புகுமோ..
கவிதையின்
முற்றுப்புள்ளியே
தொப்புட் கொடியின்
கடைசி ஒட்டுறவு..
ஆயினும்,
தாய் சேய் உறவுக்கு
பிறிவேது, மரிப்பேது..
வடித்தப்பொழுதின்
பெரிதுவப்பான்
தன் சிந்தனையைச்
சான்றோர் போற்றக்
கேட்கும் கவிஞன்..
- ஆதிரை
🙂
LikeLiked by 1 person
நல்லதொரு கவிதை.
கவிதையின் கடைசிவரியும்
கர்ப்பிணிப்பெண்ணின் நிறைமாதவயிறும் ஒன்றுதானென்பதை
மிகவழகாகச்சொல்லியுள்ளீர்கள்.
LikeLiked by 1 person
நன்றி!! 🙂
LikeLike