சில ஓசைகளும்
நிசப்தமாய் கேட்கும்..
அலை கடலின்
இறைச்சல் ஏனோ
சப்தங்களில் சேர்வதே இல்லை..
சில காட்சிப் பிழைகளும்
கவிதையாய் தோன்றும்..
தகப்பன்சாமியாய் மாறும்
குழந்தைகள் ஏனோ
குழந்தைகளாய் தெரிவதே இல்லை..
சில மௌனங்களும்
பேரிரைச்சலாய் கேட்கும்..
ஊடல் பேசிடும்
மௌனம் ஏனோ
மௌனத்தின் இனம் சேர்வதே இல்லை.
சில கவிதைகளும்
காட்சிப் பிழையாகத் தெரியும்..
நேசமிகு நட்பின்
கோபம் ஏனோ
கோபத்தில் சேர்வதே இல்லை..
இவை சொற்குற்றமா?
பொருட்குற்றமா?
அல்ல
பார்க்கும் பார்வையாளனின் குற்றமா?
விடைத்தெரியா
இந்த கேள்விகள்
ஆழியின் செல்ல அலைகள் போல..
இரசிக்க வைக்கும்..
கவிப் பொருளாக மாறும்..
ஆனால் என்றுமே
விடையும் தெரிவதில்லை..
அலைகளும் ஓய்வதில்லை..
– ஆதிரை
வார்த்தை இல்லை உன் கவிதைகளை வர்ணிக்க,
ஆதிரையே
உன் பெயரை போல் நீயும் ஒரு நட்சத்திரமோ?? நான் தான் மேகத்தின் உள்ளே மறைந்த உன்னை காண மறந்தேனோ…
LikeLiked by 1 person
உள்ளார்ந்த நன்றிகள் !!
நீ மேகத்துள் தான் இருந்தாய்..
மேகத்தின் நீர்த்துளியாய்..
It’s just that the drop has taken a while to reach the water and create its ripples.. 😉
The drop and ripples might take long to meet, but once met they are indistinguishable.. 🙂
LikeLiked by 1 person
🙂 🙂
LikeLiked by 1 person