For a detailed analysis of this song along with a wonderful English translation, Click here.
Music: Ghibran
Lyricist: Kamal Hassan
Singers: Ghibran, Kamal Hassan, Yazin Nizar
சாகாவரம் போல் சோகம் உண்டோ
கேளாய் மன்னா..
கேளாய் மன்னா..
தீரா கதையை கேட்பார் உண்டோ
கேளாய் மன்னா..
கேளாய் மன்னா..
கணியர் கணித்த கணக்குப் படி நாம்
காணும் உலகிது
வட்டப் பந்தாம்..
வட்டப் பந்தாம்.. ஓ.. வட்டப் பந்தாம்.. ஓ..
வட்டப் பந்தை வட்டமடிக்கும்
மற்றப் பந்தும்
போகும் மாண்டே..
போகும் மாண்டே.. ஓ.. போகும் மாண்டே.. ஓ..
மாளா ஒளியாம் ஞாயிறும் கூட
மற்றோர் யுகத்தில் போகும்
கரிந்தே.. ஏ..
கரிந்தே.. கரிந்தே..
கரிந்து எரிந்தும் வெடித்தப்பின்னும் உதிக்கும் குளம்பில் உயிர்கள் முளைக்கும்..
முளைத்து முறிந்தும் துளிர்க்கும் வாழை தன் மரணத்துள்ளே வைத்தது விதையை..
கேளாய் மன்னா.. ஓ.. கேளாய் மன்னா.. ஓ..
விதைத்திடும் உன்னை போல் உயிரை உயிர்த்து விளங்கும் என் கவிதை விளங்கும்..
கவிதை விளங்கும்.. ஒ..
விளங்கி துலங்கிடும் வம்சம் வாழ,
வாழும் நாளில் கடமை செய்ய,
செய்யுள் போல் ஒரு காதல் வேண்டும்..
காதல் வேண்டும்.. செய்யுள் போல் ஒரு..
காதல் வேண்டும்.. செய்யுள் போல் ஒரு..
வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன்
சாவையும் வேண்டி செத்த கதைகள்
ஆயிரம் உண்டு..
கேளாய் மன்னா.. ஒ.. கேளாய் மன்னா..
Thank you for tagging my post…Appreciate the gesture. 🙂
You have a very interesting blog going. I will check it out.
Best.
LikeLiked by 1 person
That’s an excellent analysis.. It would be a crime not to spread the word.. 😉
Thanks for the compliment..
Awaiting your comments on other posts.. 🙂
LikeLiked by 1 person