இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
11
புலவர்களே, அறிவுப்பொருள்களே, உயிர்களே,
பூதங்களே, சக்திகளே, எல்லோரும் வருவீர்.
ஞாயிற்றைத் துதிப்போம், வாருங்கள்.
அவன் நமக்கெல்லாம் துணை.
அவன் மழைதருகின்றான்.
மழை நன்று.
மழைத் தெய்வத்தை வாழ்த்துகின்றோம்.
ஞாயிறு வித்தைகாட்டுகின்றான்.
கடல்நீரைக் காற்றாக்கி மேலேகொண்டுபோகிறான்.
அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான்.
மழை இனிமையுறப் பெய்கின்றது.
மழை பாடுகின்றது.
அது பலகோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி.
வானத்திலிருந்து அமுதவயிரக்கோல்கள் விழுகின்றன.
பூமிப்பெண் விடாய்தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள்.
வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும்
விளைகின்றன.
அனைத்தும் ஒன்றாதலால்.
வெப்பம் தவம். தண்மை யோகம்.
வெப்பம் ஆண். தண்மை பெண்.
வெப்பம் வலியது. தண்மை இனிது.
ஆணிலும் பெண் சிறந்ததன்றோ?
நாம் வெம்மைத் தெய்வத்தைப் புகழ்கின்றோம்.
அது வாழ்க.
Poets, learned objects, Souls, Demons, Powers, all of you come gather.
Come let us praise the Sun.
He is support for all of us.
He gives rains.
Rain is good.
We praise the Lord of Rains.
Sun shows tricks.
He evaporates sea-water and carries it upwards.
And he commends Wind to convert it back to water.
Rain pours nicely.
Rain sings.
It is a musical instrument with billions of strings.
The heavenly-diamond-sticks fall from the sky.
The Earth-girl quenches her thirst; She becomes cool.
Heat begets Coldness, Coldness begets Heat.
Since all are one.
Heat is Penance. Coldness is Excellence.
Heat is Male. Coldness is Female.
Heat is Strong. Coldness is Sweet.
Isn't Female better than Male?
We praise the Lord of Heat.
Let it live.
Like this:
Like Loading...
Related