Universal Drama – Part 4 & 5

நான்காம் காட்சி

        இடம்: — கடற்கரை.

நேரம்: — நள்ளிரவு; முழுநிலாப் பொழுது.

இரண்டு பாம்புகள் ஒரு பாலத்தடியே இருட் புதரினின்றும்
வெளிப்பட்டு நிலா வீசி ஒளிதரும் மணல்மீது வருகின்றன.

ஆண் பாம்பு: — உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கின்பமில்லை.
உன்னால் எனது வாழ்நாள் விஷமயமாகிறது. உன்னாலேதான்
என் மனம் எப்போதும் அனலில்பட்ட புழுவைப் போலே         துடித்துக் கொண்டிருக்கிறது.

பெண் பாம்பு: — உன்னுடன் கூடிவாழ்வதில் எனக்கின்பமில்லை.
உன்னால் எனது வாழ்நாள் நரகமாகிறது. உன்னால் என் மனம்         தழலிற்பட்ட புழுவைப்போல் இடையறாது துடிக்கிறது.

ஆண் பாம்பு: — நான் உன்னைப் பகைக்கிறேன்.

பெண் பாம்பு: — நான் உன்னை விரோதிக்கிறேன்.

ஆண் பாம்பு: — நான் உன்னைக் கொல்லப்போகிறேன்.

பெண் பாம்பு: — நான் உன்னைக் கொல்லப்போகிறேன். ஒன்றையொன்று
கடித்து இரண்டு பாம்புகளும் மடிகின்றன.

ஐந்தாம் காட்சி

கடற்கரை

தேவதத்தன்
என்ற மனித இளைஞன்: — நிலா இனியது. நீல
வான் இனியது. தெண்டிரைக் கடலின் சீர், ஒலி இனிய; உலகம்
நல்லது. கடவுள் ஒளிப்பொருள். அறிவு கடவுள்; அதனிலை
மோக்ஷம். விடுதலைப் பட்டேன். அசுரரை வென்றேன். நானே
கடவுள். கடவுளே நான். காத லின்பத்தாற் கடவுள்
நிலை பெற்றேன்.

(The translation will be added eventually. If you are very keen on getting it at the earliest, do drop me a mail at Aadhirai@live.co.uk)

Advertisements

Your reply to the ripple

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s