Sea – Part 2

2


வெம்மைமிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மைகுன்றிய
பிரதேசங்களுக்குக் காற்று ஓடிவருகிறது.
அங்ஙனம் ஓடிவரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக்
கொண்டு வருகிறது.
இவ்வண்ணம் நமக்குவரும் மழை கடற்பாரிசங்களி
லிருந்தே வருகின்றது.
காற்றே, உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்
மழை கொண்டு வா.
உனக்குத் தூப தீபங்கள் ஏற்றிவைக்கிறோம்.
வருணா, இந்திரா, நீவிர் வாழ்க.
இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள்புரியவேண்டும்.
எங்களுடைய புலங்களெல்லாம் காய்ந்துபோய்விட்டன.
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்று
காலிகளுக்கும் நோய்வருகிறது. அதனை மாற்றி
யருள வேண்டும்.
பகல் நேரங்களிலே அனல் பொறுக்கமுடியவில்லை.
மனம் ‘ஹா ஹா’ வென்று பறக்கிறது.
பறவைக ளெல்லாம் வாட்டமெய்தி நிழலுக்காகப் பொந்து
களில் மறைந் கிடக்கின்றன.
பல தினங்களாக, மாலைதோறும் மேகங்கள்வந்து
கூடுகின்றன.
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய், ஓரிலைகூட
அசையாமல், புழுக்கம் கொடிதாக இருக்கிறது.
சிறிதுபொழுது கழிந்தவுடன் பெரியகாற்றுக்கள் வந்து
மேகங்களை அடித்துத்துரத்திக்கொண்டு போகின்றன.
இப்படிப் பலநாட்களாக ஏமாந்துபோகிறோம்.
இந்திரா, வருணா, அர்யமா, பகா, மித்திரா, உங்கள்
கருணையைப் பாடுகிறேன்.
எங்கள் தாபமெல்லாந் தீர்ந்து உலகம் தழைக்குமாறு
இன்ப மழை பெய்தல் வேண்டும்.

(The translation will be added eventually. If you are very keen on getting it at the earliest, do drop me a mail at Aadhirai@live.co.uk)

Universal Drama – Part 3

மூன்றாம் காட்சி

இடம்: — மண்ணுலகத்தில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு காளி கோயிலுக்
கெதிரே சோலையில்.

கிளி பாடுகிறது: — தைர்யா, தைர்யா, தைர்யா —
தன்மனப் பகையைக் கொன்று
தமோ குணத்தை வென்று
உள்ளக் கவலை யறுத்து
ஊக்கந் தோளிற் பொறுத்து
மனதில் மகிழ்ச்சி கொண்டு
மயக்க மெலாம் விண்டு
சந்தோஷத்தைப் பூண்டு
தைர்யா, ஹுக்கும், ஹுக்கும்!
ஹுக்கும், ஹுக்கும்!
ஆமடா, தோழா!
ஆமாமடா,
எங்கோவா, எங்கோவா!
தைர்யா, தைர்யா, தைர்யா!

குயில்கள்: — சபாஷ்! சபாஷ்! சபாஷ்!

குருவிகள்: — ‘டிர்ர்ர்ர்ர்ர்ர்ர்’, ‘டிர்ர்ர்ர்’

நாகணவாய்: — ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ,

குருவிகள்: — சிவ, சிவ, சிவ, சிவ, சிவசிவா, சிவசிவா, சிவசிவா.

காக்கை: — எங்கோ வாழ்! எங்கோ வாழ்!

கிளி: — கேளீர், தோழர்களே! இவ்வுலகத்தில் தற்கொலையைக்
காட்டிலும் பெரிய குற்றம் வேறில்லை. தன்னைத்தான் மனத்தால்        துன்புறுத்திக் கொள்வதைக் காட்டிலும் பெரிய பேதைமை
வேறில்லை.

காக்கை: — அக்கா! அக்கா! காவு! காவு!

குருவி: — கொட்டடா! கொட்டடா! கொட்டடா!

கிளி: — ஹுக்குக்கூ!

கிளி: — காதலைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறில்லை.

அணிற் பிள்ளை: — ஹுக்கும், ஹுக்கும், ஹுக்கும், ஹுக்கும்.

பசுமாடு: — வெயிலைப்போல் அழகான பதார்த்தம் வேறில்லை.

அணில்: — பசுவே, இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்குப்
புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே உன் கண்ணைப் போல்
அழகிய பொருள் பிறிதொன்றில்லை.

நாகணவாய்: — டுபுக்! பாட்டைக் காட்டிலும் ரசமான தொழில் வேறில்லை.

எருமை மாடு: — பக்ஷி ஜாதிகளுக்குள்ள சந்தோஷமும், ஜீவ ஆரவாரமும்,
ஆட்ட ஓட்டமும், இனிய குரலும் மிருக ஜாதியாருக்கும், மனுஷ்ய         ஜாதியாருக்கும் இல்லையே? இதன் காரணம் யாது?

நாகணவாய்: — டுபுக்! வெயில் காற்று, ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக
மனிதர்களைக்காட்டிலும் எங்களுக்கதிகம். எங்களுக்கு உடம்பு
சிறிது. ஆதலால் தீனி சொற்பம்; அதைச் சிறிது சிறிதாக
நெடுநேரம் தின்கிறோம். ஆதலால் எங்களுக்கு உணவின்பம்
அதிகம். மிருக மனிதஜாதியார்களுக்குள் இருப்பதைக்காட்டிலும்         எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம். ஆதலால் நாங்கள் அதிக         சந்தோஷமும், பாட்டும், நகைப்பும், கொஞ்சு மொழிகளுமாகக்
காலங்கழிக்கிறோம். இருந்தாலும், கிளியரசு சொல்லியதுபோல்,         காலனுக்குத் தூதனாகிய மனக்குறையென்னும் பேய் எங்கள்
குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது. அதற்கு நிவாரணம்         தேடவேண்டும். கவலையைக் கொல்வோம் வாருங்கள்.
அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம். மற்றப்

பக்ஷிகள்: — வாருங்கள், வாருங்கள், வாருங்கள் துயரத்தை அழிப்போம்,
கவலையைப் பழிப்போம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம்.

(The translation will be added eventually. If you are very keen on getting it at the earliest, do drop me a mail at Aadhirai@live.co.uk)

Universal Drama – Part 1

ஜகத் சித்திரம்

(சிறு நாடகம்)

முதல் காட்சி

இடம் — மலையடி வாரத்தில் ஒரு காளி கோயில்.
நேரம் — நடுப்பகல்.

காக்கை யரசன்
— (கோயிலை எதிர்த்த தடாகத்தின் இடையிலிருந்த
தெப்பமண்டபத்தின் உச்சியில் ஏறி
உட்கார்ந்துகொண்டு சூர்யனை நோக்கிச்
சொல்லுகிறான்: — )

“எங்கோ வாழ்!
நீல மலைகள் நிரம்ப அழகியன.
வானம் அழகியது. வான்வெளி இனிது.
வான வெளியை மருவிய நின்னொளி
இனியவற்றுள் எல்லாம் இனிது.

‘எங்கே,’ ‘எங்கோ,’ எனவும்; அன்றி
‘கிலுகிலு கிலுகிலு’ எனவும்; ‘கிக்கீ;
கிக்கீ’ என்றும்; ‘கேக்க,’ ‘கேக்க’
‘கேட்க, கேட்க’ எனவும்; ‘கெக்கெக்கே’ —
‘குக்குக் குக்குக் குக்குக் குக்குக
குக்கூவே!’ என்றும்; ‘கீச்கீச், கீச்கீச்,’
‘கிசு, கிசு, கிசுகீச்’ என்றும்; ‘ரங்க, ரங்க’ —
என்றும் பல்லாயிர வகையினில் இசைக்கும்
குயில்களும், கிளிகளும், குலவுபல ஜாதிப்
புட்களும் இனிய பூங்குர லுடையன.
எனினும்,
இத்தனையின்பத் தினிடையே, உயிர்க் குலத்தின்
உளத்தே மாத்திரம் இன்ப முறவில்லை.
இஃதென்னே! — காக்கா! காக்கா; எங்கோவாழ்!”
இனதக் கேட்டு, மற்றப் பக்ஷிகளெல்லாம் கத்துகின்றன: —

“ஆம், ஆம், ஆமாம், ஆமாம். ஆமாமடா!
ஆமாமடா! ஆமாம். எங்கோ வாழ். எங்கோ வாழ்.
நன்றாக உரைத்தாய். மனந்தான் சத்துரு. வேறு
நமக்குப் பகையே கிடையாது. மனந்தான் நமக்குள்ளேயே
உட்பகையாக இருந்துகொண்டு, நம்மை வேரறுக்கிறது. அடுத்துக் கெடுக்கிறது.
    மனந்தான் பகை.

அதைக் கொத்துவோம் வாருங்கள். அதைக் கிழிப்போம் வாருங்கள். அதை வேட்டையாடுவோம் வாருங்கள்.”

(The translation will be added eventually. If you are very keen on getting it at the earliest, do drop me a mail at Aadhirai@live.co.uk)

Freedom – Part 2

இரண்டாம் காட்சி
வானுலகம் — இந்திர சபை

தேவேந்திரன் கொலுவீற்றிருக்கிறான்.
தேவ சேவகன்: — தேவ தேவா!
இந்திரன்: — சொல்.
தேவ சேவகன்: — வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார்.
தங்களைத் தரிசிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்.
இந்திரன்: — வருக.
(நாரதர் பாடிக்கொண்டு வருகிறார்).
“நாராயண, நாராயண, நாராயண, ஹரி, ஹரி, நாராயண, நாராயண”
இந்திரன்: — நாரதரே! நாராயணன் எங்கிருக்கிறான்?
நாரதர்: — நீ அவனைப் பார்த்தது கிடையாதோ?
இந்திரன்: — கிடையாது.
நாரதர்: — ஸர்வ பூதங்களிலும் இருக்கிறான்.
இந்திரன்: — நரகத்திலிருக்கிறானா?
நாரதர்: — ஆம்.
இந்திரன்: — துன்பத்தி லிருக்கிறானா?
நாரதர்: — ஆம்.
இந்திரன்: — மரணத்திலிருக்கிறானா?
நாரதர்: — ஆம்.
இந்திரன்: — உங்களுடைய ஸர்வ நாராயண சித்தாந் தத்தின் துணிவு யாது?
நாரதர்: — எல்லா வஸ்துக்களும், எல்லா லோகங்களும், எல்லா நிலைமைகளும்,
எல்லாத் தன்மைகளும், எல்லா சக்திகளும், எல்லா ரூபங்களும்,
எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.
இந்திரன்: — நீரும் கழுதையும் சமானந்தானா?
நாரதர்: — ஆம்.
இந்திரன்: — அமிருத பானமும், விஷபானமும் சமானமா?
நாரதர்: — ஆம்.
இந்திரன்: — சாதுவும், துஷ்டனும் சமானமா?
நாரதர்: — ஆம்.
இந்திரன்: — அசுரர்களும், தேவர்களும் சமானமா?
நாரதர்: — ஆம்.
இந்திரன்: — ஞானமும், அஞ்ஞானமும் சமானமா?
நாரதர்: — ஆம்.
இந்திரன்: — சுகமும், துக்கமும் சமானமா?
நாரதர்: — ஆம்.
இந்திரன்: — அதெப்படி?
நாரதர்: — சர்வம் விஷ்ணுமயம் ஜகத் —
(பாடுகிறார்) நாராயண, நாராயண, நாராயண, நாராயண.

(The translation will be added eventually. If you are very keen on getting it at the earliest, do drop me a mail at Aadhirai@live.co.uk)

Freedom – Part 1

விடுதலை

(நாடகம்)
அங்கம் 1
காட்சி 1

இடம் — மலையடி வாரத்தில் ஒரு காளி கோயில்.
நேரம் — நடுப்பகல்.
காக்கை யரசன் — (கோயிலை எதிர்த்த தடாகத்தின் இடையிலிருந்த
தெப்பமண்டபத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்துகொண்டு
சூர்யனை நோக்கிச் சொல்லுகிறான்: — )

“எங்கோ வாழ்!
நீல மலைகள் நிரம்ப அழகியன.
வானம் அழகியது. வான்வெளி இனிது.
வான வெளியை மருவிய நின்னொளி
இனியவற்றுள் எல்லாம் இனிது.
‘எங்கே,’ ‘எங்கோ,’ எனவும்; அன்றி
‘கிலுகிலு கிலுகிலு’ எனவும்; ‘கிக்கீ;
கிக்கீ’ என்றும்; ‘கேக்க,’ ‘கேக்க’
‘கேட்க, கேட்க’ எனவும்; ‘கெக்கெக்கே’ —
‘குக்குக் குக்குக் குக்குக் குக்குக
குக்கூவே!’ என்றும்; ‘கீச்கீச், கீச்கீச்,’
‘கிசு, கிசு, கிசுகீச்’ என்றும்; ‘ரங்க, ரங்க’ —
என்றும் பல்லாயிர வகையினில் இசைக்கும்
குயில்களும், கிளிகளும், குலவுபல ஜாதிப்
புட்களும் இனிய பூங்குர லுடையன.
எனினும்,
இத்தனையின்பத் தினிடையே, உயிர்க் குலத்தின்
உளத்தே மாத்திரம் இன்ப முறவில்லை.
இஃதென்னே! — காக்கா! காக்கா; எங்கோவாழ்!”
இனதக் கேட்டு, மற்றப் பக்ஷிகளெல்லாம் கத்துகின்றன: —
“ஆம், ஆம், ஆமாம், ஆமாம். ஆமாமடா! ஆமாமடா! ஆமாம்.
எங்கோ வாழ். எங்கோ வாழ். நன்றாக உரைத்தாய். மனந்தான் சத்துரு.
வேறு நமக்குப் பகையே கிடையாது. மனந்தான் நமக்குள்ளேயே
உட்பகையாக இருந்துகொண்டு, நம்மை வேரறுக்கிறது. அடுத்துக்
கெடுக்கிறது. மனந்தான் பகை.
அதைக் கொத்துவோம் வாருங்கள். அதைக் கிழிப்போம் வாருங்கள்.
அதை வேட்டையாடுவோம் வாருங்கள்.”

(The translation will be added eventually. If you are very keen on getting it at the earliest, do drop me a mail at Aadhirai@live.co.uk)

[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 8

8

We sing praise of Parasakthi.
How was she formed?
That’s what is not known.
Isn’t she the born mother; from the almighty “self”.
From what was she formed?
How did she form from the almighty “self”? Don’t know.
Creation is not known to the eyes.
Not known even to the wisdom.
Death is known to the eyes; But not known to the wisdom.
Life is about praising the Sakthi; The benefit of this is attaining pleasure.
For the heart to be clear; For the life force to have speed and heat; For the body to have peace and strength.
Living is getting the blessings of Maha Sakthi.
We are living.
We again praise the Maha Sakthi, who makes us live.


This is the final part of the prose-poetry Sakthi. The original version of this post will be available shortly in http://www.lyricaldelights.com. The other versions are available in the above link.

[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 7

7

Snake charmer is playing the flute.
Is the music born in the flute?
Is it born in the hole (Of the flute)?
Is it born in the breath of the snake charmer?
It’s born in his heart; Exposed through the flute.
Heart doesn’t sound by itself.
Flute can’t flow music by itself.
Heart doesn’t merge with the flute.
Heart merges with breath.
Breath merges with flute.
Flute plays.
This is the play of Sakthi.
She sings in the heart. It resonates in the holes of the flute.
Matching the unmatchable and creating harmony in it — Sakthi
Small boys* are calling out for alms.
Who created symphony between charmer’s flute and voice of those boys? Sakthi
“Jari^ for sale; Jari” a passerby shouts out, in the same rhythm.
Ah! I found the essence.
The life of charmer, life of those kids and the life of that Jari merchant is being played by the same Sakthi.
Instruments are many. Instrumentalist is one.
Appearances are many. Sakthi is one.
Hail thee!

^Jari – The border of Saree is woven with golden threads. When the Saree wears out, the Jari is reused.


The Tamil version of the above translation will be available shortly at http://www.lyricaldelights.com

[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 6

Sakthi

First part: Happiness

6

Snake-charmer plays the pipe.
“Beautiful music is of sorrow” so we had heard.
But the music sung by this charmer is sweet,
yet, not of sorrow feeling.
This is like a debate by the learned people.
Like a novelist adding line after line
which are short and filled with meaning.
What is this charmer debating about?
“thaanathanthath thaanathanthath thaa-thanath
thaanathandana thaanathandana thaa–
thanthanathana thanthanathana thaa”
Like that he is playing variety in loops.
What is the meaning of this?
A child said the following meaning for this:
“I adorned flowers to Kali.
A donkey came to eat them away.”
In the name of Sakthi, I built this body.
The pain from sin is eating this away.
I surrendered to Parasakthi.
The pain vanished.
Parasakthi started to live on my soul with light.
Let her live long.


Note: Sakthi literally means Power and also the name of Goddess.

The Tamil version of the above translation is available at http://www.lyricaldelights.com

[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 5

Sakthi

First part: Happiness

5

“Could put up a fence in land.
But is it possible to fence in sky?” Yes, you can.
Isn’t the sky filling even the land?
If you fence up land, doesn’t it mean
that the sky of that part is also fenced up?
Control Body. Then controlling soul is possible.
Control Soul. Then controlling mind is possible.
Control Mind. Then controlling Sakthi is possible.
There is no despair in being controlled by the Sakthi.
There is a cotton pillow before me.
It has a shape, a size, a purpose to it.
Sakthi looks after that this purpose is met out.
It can be preserved without being extinct,
even as long as humans exist in this world.
If it is renewed often, Sakthi exists in it for longer.
If not renewed, the form changes.
Dirty pillow, tattered pillow, old pillow —
Take out the cotton in it and use in mattress.
Throw out the outer cover as waste cloth.
It’s form has expired.
If the form is preserved, Sakthi could be preserved.
That is, Sakthi could be preserved in the same form.
Even when the form changes, Sakthi doesn’t change.
Everywhere, everything, every time, every activity exhibits Sakthi.
It is good to preserve the form.
In the name of Sakthi.
It is good to praise Sakthi, by preserving the form.
But one who preserves just the form, loses Sakthi.


Note: Sakthi literally means Power and also the name of Goddess.

The Tamil version of the above translation is available at http://www.lyricaldelights.com

[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 4

Sakthi

First part: Happiness

4

“Could put up a fence in land.
But is it possible to fence in sky?” asked Ramakrishna muni.
Could tie up inanimate objects. But is it possible to tie Sakthi?
Could tie up the body. But is it possible to tie the soul?
Tie up the soul. Then it is possible to tie the heart.
Sakthi in me is in my soul and heart.
Sakthi should have infinite temples.
In the time without the beginning and ending, she should have new temples at every minute.
Out of these infinite temples, the name of one of the temple is “Me”.
If it is renewed ceaselessly, Sakthi will be present in it.
When it becomes old, She will leave it.
Now, she is filled in me.
Now, my soul is bubbling with energy and contentment.
Now, my body has comfort and strength.
Now, my thoughts are clear.
This is enough for me.
I will not linger in the past, neither ponder about the future.
Now, Sakthi is sitting in the throne within me.
Let her live long!
I praise her, hail her, pray to her incessantly.


Note: Sakthi literally means Power and also the name of Goddess. This part explains that Sakthi is omnipresent and is in every person as well as animate and inanimate object. The nouns referred to in the content are the names of Gods in Hindu mythology.

The Tamil version of the above translation is available at www.lyricaldelights.com