சூனியத்திலிருந்து சூரியனாகும் ஒரு பயணம்
பெரும் பிரயத்தனம் கொண்டே
மெதுமெதுவாக சிறு பிறையினைக் கூட்டி
சுட்டெரிக்கும் வெம்மையை அகற்றி
தண்ணென குளிர்வைக் கூட்டி
முழு தகடாய் ஒளிர்ந்த நாளில்,
சலனமற்ற தண்ணீர் உரக்கவே முழங்கியது
வெண்ணிலவின் களங்கம் கொண்ட வெண்மையினை..
கண்டு நாணி முகில் கொண்டு முகம் மூடி
வெட்கி மருகி தினம் தினம் கரைந்தது..
அத்துடன் கரைந்தது அதன் களங்கமும்..
மீண்டும் வளர மீண்டும் களங்கம்,
மீண்டும் தேய்ந்தும் மாளா நம்பிக்கை..
யுகங்கள் கடந்து பிறவிகள் கடந்து
தினம் தினம் நிகழும் ஒரு போராட்டம்..
சூனியம் சூரியனாகும் நாள் வரை
நிலவின் நம்பிக்கையும் வளரும்!
A journey from infinity to Sun..
With a tremendous effort,
Adding one crescent over another,
Removing the wrath of heat,
It glowed as a full plate
And on that day,
The undisturbed water screamed out loud,
Pointing the impurities in the white of the moon..
The moon closed its face with the clouds,
in shame, it started declining everyday..
And along with it, its impurities..
As it grew back, so did the spots,
Thought it shrunk, its hope did not..
Over eons and many births
The struggle continues everyday..
Till the day the new moon becomes full moon,
The hope too grows along with it!
beautiful post Ms A…the journey of life, the struggles & hope!!
LikeLike